விதிமுறைகளை மீறிய வெல்டிங் பட்டறைக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

விதிமுறைகளை மீறிய வெல்டிங் பட்டறைக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி
X

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சங்கரநாராயணன், சுரண்டை பேருராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், சுரண்டை எஸ்ஐ சையது இப்ராஹிம் மற்றும் அரசு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது வெல்டிங் பட்டறை ஒன்று அரசு விதிமுறைகளை மீறி இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த வெல்டிங் பட்டறையை சீல் வைத்து அதிகாரிகள் அந்த பட்டறைக்கு ரூ5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் சுரண்டை மெயின் ரோட்டில் 10 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கும் அபராதம் விதித்தனர்

Tags

Next Story
ai tools for education