தென்காசியில் சத்தியம் பயோவின் 38வது கிளை திறப்பு விழா
வேளாண் இணை இயக்குனர் நல்ல முத்துராஜா திறந்து வைத்தார்.
தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அலங்கார நகர் பகுதியில் அமைந்துள்ள சத்யம் பயோவின் 38வது கிளையை தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா திறந்து வைத்தார். சத்யம் ஆக்ரோ கிளினிக் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
விழாவில் பேசிய வேளாண் இணை இயக்குநர், விவசாயிகள் நஞ்சில்லா உணவினை உற்பத்தி செய்வதையும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கொடுப்பதையும் சத்தியம் பயோ கடமையாக கொண்டுள்ளார்கள் என்றும், இந்தவாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய சத்யம் ஆக்ரோ கிளினிக் நிர்வாக இயக்குநர் செந்தில் குமார், இன்றைய காலகட்டத்தில் இயற்கை உரம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் அதிகரித்து வருகிறது என்றும், எங்களது நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இயற்கை உரங்களை தயாரித்து வருவதாகவும் இந்த உரத்தை பயன்படுத்துவதால் கூடுதல் மகசூல் கிடைப்பதை மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆய்வுக் குழுவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
எங்கள் நிறுவனம் சார்பில் இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் சத்யம் ஆக்ரோ கிளினிக் கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளததாகவும், ஒரு மாநிலத்தில் ஆயிரம் ஷோரும்கள் வீதம் மொத்தம் ஐந்தாயிரம் ஷோம்ரூம்கள் திறக்கவும், இதனால் 3 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க திட்டமிட்டு செயல்படுவதாக கூறினார். அதேபோல் 5 லட்சம் விவசாயிகள் உதவியுடன் 5 கோடி ரூபாய் விற்பனை இலக்கினை எட்டுவது எங்களது குறிக்கோள் என்றார். இதனை சத்யம் ஆக்ரோ கிளினிக், விவசாயிகளின் ஒத்துழைப்புடன் செய்து முடிக்கும் என உறுதியுடன் தெரிவித்தார்.
விழாவில் தென்காசி மாவட்டத்தின் வேளாண் உதவி இயக்குனர் கனகம்மாள் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் சண்முகசுந்தரம், சரவணன், சமூக ஆர்வலர் சண்முக மாலதி, தென்காசி மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள், சத்தியம் குடும்பத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu