குட்கா பொருட்கள் விற்பனை: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் (கோப்பு படம்).
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்களிடையே குட்கா,புகையிலைப் பொருட்கள்,கஞ்சா போன்ற பழக்கவழக்கங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரி அருகே உள்ள கடைகளில் குட்கா புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாவட்டத்திலுள்ள வர்த்தக சங்கத்தினரிடம் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதுடன் அவரின் கடையும் உணவு பாதுகாப்பு அதிகாரி மூலம் சீல் வைக்கப்படும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொலைபேசி எண்ணிற்கு (9498166566) நேரடியாக புகார் அளிக்கலாம். புகார் செய்பவர்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
இதேபோல் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வர்த்தகர்களிடமும் காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu