/* */

குற்றாலத்தில் தீயணைப்பு துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

குற்றாலத்தில் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

குற்றாலத்தில் தீயணைப்பு துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
X

குற்றாலத்தில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை மாதங்கள் ஆகும். இந்த காலநிலையில் குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளிக்க அனுமதி இல்லாத செண்பகா தேவி அருவி, தேனருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டும்.

இந்த பருவநிலை காலங்களில் இதமான தென்றல் காற்றுடன் சாரல் மழை பொழியும் இதனை அனுபவிக்க ஏராளமான தமிழ்நாடு மற்றும் அல்லாது வெளி மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அவ்வப்போது மழை அதிகரித்து அருவிகளில் திடீரென வெள்ளம் ஏற்படும். இந்த வெள்ளத்தில் சிக்குபவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சாதுரியமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இடர்கள் தொடர்பாக தீயணைப்பு மீட்பு துறையினர் சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியில் குற்றாலம் பிரதான அருவியில் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது விபத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது.

குறிப்பாக விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த உடன் விரைந்து வந்து வழியில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி துரிதமாக செயல்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி தவித்த இளைஞரை மீட்டனர். மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பாறையின் இடுக்கி சிக்கிக்கொண்ட இளைஞரை தீயணைப்பு வீரர்கள் கயிறு வழியாக சென்று தத்துரூபமாக மீட்டனர்.

தீயணைப்புத் துறையின் உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக நடைபெற்ற ஒத்திகை பயிற்சியை குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் பரபரப்புடன் கண்டு ரசித்தனர்.

Updated On: 19 Sep 2023 11:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க