தென்காசியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து  சாலை மறியல்
X

தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சாலை மறியல் நடைபெற்ற போது எடுத்த படம்

தென்காசியில் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.

சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தென்காசி மாவட்டம் தென்காசி தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாக கூறி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் P. சுகந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் இசக்கிதுரை ஆகியோர் தலைமையில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் எஸ். அயுப்கான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் M.S கிட்டப்பா ஆகியோர் முன்னிலையில் மறியல் போராட்டம் நடை பெற்றது.

மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, வேல் மயில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பால்ராஜ், லெனின் குமார், மாரியப்பன், சங்கரி இராமகிருஷ்ணன் ஆயிஷா, பாரதி, தென்காசி, செங்கோட்டை, கடையம், ஆகிய வட்டார குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், மின்அரங்கம் சார்பில் பட்டமுத்து, பச்சையப்பன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் S.மாரியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடையநல்லூர் தாலுகா செயலாளர் பழநிச்சாமி, மாதர் சங்க தாலுகா தலைவி திருமலையம்மாள், மற்றும் வட்டார குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உட்பட 21 பெண்கள், 55 ஆண்கள் என மொத்தம் 76 பேர் கைதாகினர். முன்னதாக மறியலில் சுமார் 125 பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future