அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியல் தென்காசியில் பரபரப்பு

அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியல் தென்காசியில் பரபரப்பு
X

பட விளக்கம்: சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியலால் தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும், அரசு துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை காலம் முறை ஊதியம் வழங்கி பணி வழங்கிடவும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழக முழுவதும் இன்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டமானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே தென்காசி மாவட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டமானது நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற தவறினால் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும், வருகின்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி திருச்சியில் வாழ்வா? சாவா? என்ற தலைப்பில் போராட்ட பிரகடன மாநில மாநாடு நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.

மேலும், சத்துணவு ஊழியர்கள் நடத்திய திடீர் சாலை மறியல் போராட்டத்தால் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்