பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

Revenue Department Employees Agitation 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் உண்ணாவிர போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

Revenue Department Employees Agitation

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவுவாயில் அருகே வருவாய்த்துறை ஊழியர்களின் உண்ணாவிரதம் போராட்டமானது நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிர போராட்டமானது நடைபெற்ற நிலையில், காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உண்ணாவிரத போராட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Feb 2024 10:14 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து பூஜை துவக்கம்
 2. தமிழ்நாடு
  நாளை முதல் தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்
 3. அரசியல்
  தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் மட்டுமே?: கமல் தீவிர ஆலோசனை
 4. தமிழ்நாடு
  சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைப்பது குறித்து தலைமைச் செயலாளர்...
 5. வீடியோ
  எ.பழனிசாமி ஆட்சியா நடந்துச்சு ? கல்லாப்பெட்டி கம்பெனி நடந்துச்சு !#ttv...
 6. இந்தியா
  செல்போன் இருந்தா..நீங்களும் தேசிய படைப்பாளி விருது வாங்கலாம்..!
 7. லைஃப்ஸ்டைல்
  Funny Food Quotes In Tamil உணவுக்கு முன் பசியுடன் இருப்பதை விட ...
 8. வீடியோ
  EPS-ஐ ஓட ஓட விரட்ட வேண்டும் | தொண்டர்களுக்கு உத்தரவுபோட்ட OPS |...
 9. வீடியோ
  MGR வகுத்த சட்டவிதிகள் ! மாற்றியமைத்த பழனிசாமி !#ops #OPS #OPSspeech...
 10. நாமக்கல்
  ரூ. 57.22 லட்சம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ராஜேஷ்குமார்...