ராஜீவ் காந்தி நினைவு தினம்: தென்காசி மாவட்ட காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

ராஜீவ் காந்தி நினைவு தினம்: தென்காசி மாவட்ட காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
X

ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி தென்காசி மாவட்ட காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது வின்னர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தென்காசி காந்தி சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் திரு உருவப்படத்திற்கு மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சுரண்டை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் சிறு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி வட்டார தலைவர் பெருமாள், சுரண்டை நகர் தலைவர் ஜெயபால், தென்காசி நகர பொருளாளர் ஈஸ்வரன், ஆயிரபேரி மூர்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது