தென்காசியில் சூறைக்காற்றுடன் சாரல் மழை: மரங்கள் சாய்ந்தன

தென்காசி சுற்றுப்பகுதியில், சாரல் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதில், மரங்கள் சாய்ந்தன.

தென்காசி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. மழையுடன், பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. தென்காசி வாக்கால் பாலம் அருகே, மின்மாற்றியில் மரம் சாய்ந்ததால், பலமணி நேரம் மின்விநியோகம் தடைபட்டது.

அதேபோல், தென்காசி கடையம் செல்லும் சாலையில் உள்ள மாதாபுரத்தில் மரம் சாய்ந்து உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள மரம், பலத்த காற்றினால் சாய்ந்தது. ஆங்காங்கே சாய்ந்து விழுந்த மரங்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், பேரிடர் துறையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story