தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இடிந்த ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர்

தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இடிந்த ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர்
X

பலத்த மழையால் தென்காசி ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

தென்காசி மாவட்டத்தில் பெய்த கன மழையால் ரயில் நிலையத்தின் சுற்று சுவர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகின்றது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகர் முழுவதும் மழை நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்தனர். இந்த சூழ்நிலையில் இன்று மாலை மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியது.

தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓட தொடங்கியது. இதனால் தென்காசி ரயில்வே நிலையத்தில் சுற்றுச்சுவர் பாதிப்படைந்து முற்றிலும் சரிந்து விழுந்தது. குற்றால அருவிகளில் தண்ணீர் சீரான சூழ்நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!