குற்றாலம் பேரூராட்சியில் திமுக புறக்கணிப்பால் தேர்தல் ஒத்திவைப்பு

குற்றாலம் பேரூராட்சியில் திமுக புறக்கணிப்பால் தேர்தல் ஒத்திவைப்பு
X

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை திமுக புறக்கணித்ததன் காரணமாக தேர்தல் நடுத்தும் அலுவலர் ஒத்திவைத்து அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தின் பிரதானமாக குற்றாலம் பார்க்படுகிறது. அந்த வகையில் குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்ற திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. இதில் நடைபெற்று முடிந்த பேரூராட்சி தேர்தலில் குற்றாலத்தில் உள்ள 8 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக 4க்கு 4 என்ற விகிதத்தில் சம அளவில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று பேரூராட்சி மறைமுக தலைவர் தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர்.

இதனை தொடர்ந்து தேர்தலுக்கான கால அவகாசம் நிறைவு பெற்ற நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகநாதன் அறிவித்தார். இதுகுறித்து அதிமுக உறுப்பினர்கள் கூறுகையில் திமுக தேர்தலில் குளறுபடி செய்யவே இவ்வாறு முயற்ச்சிப்பதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!