குற்றாலம் சுற்றுலா பயணிகளிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு

குற்றாலம் சுற்றுலா பயணிகளிடமிருந்து  திருடப்பட்ட  தங்க நகைகள் மீட்பு
X

 மீட்கப்பட்ட நகைகளை படத்தில் காணலாம்.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளிடமிருந்து திருடப்பட்ட 66 பவுன் தங்க நகைககளை மீட்ட காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து திருடப்பட்ட 66 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. இந்த வழக்கை திறம்பட கையாண்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தை பொருத்தவரை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலகட்டமாகும். இந்த காலகட்டங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் நீராடி செல்கின்றனர்.

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவ்வப்போது திருடர்கள் குறிப்பாக பெண்களின் நகைகள் திருடி செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒரே நாளில் சுற்றுலா பயணிகள் ஏழு நபர்களின் தங்க நகைகள் திருடப்பட்டதாக குற்றாலம் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் ராஜசேகர் என்பது தெரிய வந்த நிலையில் காவல் துறையினர் அவரை பிடித்து விசாரித்போது மேலும் 9 நபர்களிடமிருந்து தங்க நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து மொத்தமாக 66 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் கூறுகையில், அருவியில் பெண்களின் நகையை திருடிய குற்றவாளியை பிடித்து விசாரித்த போது மேலும் சில நபர்களின் பெயர்களை கூறியுள்ளதாகவும் எனவே அவர்களை தேடி வருவதாக கூறினார். மேலும்

அருவியில் சீசன் காலகட்டங்களில் நகைகள் திருடப்பட்டதாக கொடுக்கப்பட்டதாக வழக்குகள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இந்த ஆண்டு குற்றவாளி கண்டறிப்பட்டு நகை மீட்டக்கப்பட்டது முதல்முறை என தெரிவித்தார். அதோடு இந்த வழக்குகளை திறம்பட விசாரித்த காவல் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

Tags

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!