தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி: எஸ்பி அதிரடி நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி: எஸ்பி அதிரடி நடவடிக்கை
X

தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து. எஸ்பி அதிரடி நடவடிக்கை

தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து (Storming Operation) - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என்றும்,மேலும் குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை (Storming Operation) மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்திலுள்ள 76 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டும்,வாகன சோதனையில் 666 வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகள், பழைய குற்றவாளிகள் என மொத்தம் 82 குற்றவாளிகள் வீடுகளுக்குச் சென்று அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தணிக்கை செய்ய்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களை, வங்கிகள், நகை கடைகள் என மொத்தம் 345 இடங்களின் ரோந்து சென்று அங்குள்ள பட்டா புத்தகத்தில் கையெழுத்திட்டு அங்குள்ள வாட்ச் மேன்களை விழிப்புடன் இருக்கும் படியும் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக 15 அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 77 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 19 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் துறையினரின் இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் சிறப்பாக ரோந்து பணி மேற்கொண்ட காவல் துறையினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings