ஆலங்குளத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு
X

ஆலங்குளத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ஆலங்குளத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ஆலங்குளத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022 அன்றும், வாக்கு எண்ணிக்கை 22.02.2022 ம் தேதியும் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு பதட்டமான பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதேபோல் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மேளதாளம் முழங்க இசைக்கலைஞர்களுடன் துணை காவல் கண்காணிப்பாளர் நித்யா தலைமையில் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் முன்னிலையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இக்கொடி அணிவகுப்பில் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!