தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர் முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

பைல் படம்.
Public Grievance Status - தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனிநபர் கடன் உதவித் தொகை தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என 497 மனுக்கள் பெறப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்கள் என்பதை விசாரனை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரார்களுக்கு பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் ,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்து மாதவன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் (பொ) ராஜ மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu