ஆடி அமாவாசையன்று குற்றாலத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

ஆடி அமாவாசையன்று குற்றாலத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
X

குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் மக்கள் 

குற்றாலத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய குற்றால அருவியில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்துள்ளனர். தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி வருகின்றனர்.

தமிழகத்தில் ஆடி அமாவாசை இன்று அனுசரிக்கப்படும் சூழலில் இந்த அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்படும் மரபாக இருந்து வருகிறது. அதுவும் ஆடி, புரட்டாசி, தை அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்து படையலிட்டு வழிபட்டு வருகின்றனர்.

அதிலும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அந்த வகையில் புண்ணிய தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக போதிய மழை இல்லை. அதனால் தற்போது தண்ணீர் வரத்து குறைவாக கொட்டி வருகிறது.


ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் சாரல் மழையும் மெல்லிய காற்றையும் அனுபவிக்க ஏராளமான கேரளா, ஆந்திரா, போன்ற பிற மாநிலங்களில் இருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் அருவி பகுதியில் குவிந்தனர். அருவிக்கரையில் வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர், நட்சத்திரம் போன்ற விபரங்களை கூறி எள்ளும், தண்ணீரும் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். அதிக கூட்டம் காரணமாக மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகளும், தர்ப்பணம் கொடுத்தவர்களும் நீண்டவரிசையில் காத்திருந்து குளித்து செல்கின்றனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு