சாலைகளை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சாலைகளை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

பட விளக்கம்: சாலைகளை சீரமைக்க கோரி ஆறு கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

6 கிராமங்களில் சேதமடைந்த கிராமப்புற இணைப்பு சாலைகளை சீரமைக்க கோரி . கிராம மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் திப்பணம் பட்டி முதல் அரியப்பபுரம் கிராமம் வரை உள்ள 3 கி.மீட்டர் தூரத்திற்கும், நாட்டார்பட்டி முதல் திரவிய நகர் வரை உள்ள 4 கி.மீட்டர் தூரத்திற்கும் உள்ள சாலைகள் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக சிதிலமடைந்து காணப்படுகிறது.

7 கி.மீட்டர் தூரத்தில் திப்பணம் பட்டி, சென்னெல்தா புதுக்குளம், நாட்டார்பட்டி . பூவனூர், அரியப்பபுரம், திரவியநகர் ஆகிய 6 கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் அரியப்பபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவசர தேவைகளுக்கும், பள்ளி குழந்தைகள் பள்ளி சென்று வருவதற்கும் இந்த சாலைகளை பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதாக கூறி 6 கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினரும் இணைந்து பாவூர்சத்திரம் - கடையம் சாலையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது திப்பணம் பட்டி முதல் அரியப்பபுரம், நாட்டார்பட்டி முதல் திரவிய நகர் வரை உள்ள சேதமடைந்த கிராமப்புற இணைப்பு சாலைகளை பராமரித்து புதிய சாலைகள் அமைக்கோரியும், சேதமடைந்த சாலைகளை பராமரிக்காத அரசு கிராமப்புற நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்தும், போர்க்கால் அடிப்படையில் சாலைகளை பராமரிக்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகள் ஒரு வார காலத்தில் நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல் போன்று அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 19 March 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    Thanchai Periya Kovil-அதிசயத்தின் அதிசயம், தஞ்சை பெரிய கோவில்..!
  2. தொழில்நுட்பம்
    Governments Spying on Apple & Google Users-ஆப்பிள்,கூகுள் தரவுகள்...
  3. தமிழ்நாடு
    கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
  4. இந்தியா
    Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
  5. தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
  6. தமிழ்நாடு
    தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
  7. இந்தியா
    Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
  8. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  9. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  10. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...