பங்குனி உத்திர திருவிழா: தோரண மலையில் சிறப்பு வழிபாடு
தோரணமலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கடையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோயில். இந்த கோயிலில் முருகனை சித்தர்களால் இன்றும் பூஜிக்கப்படுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் பூஜிக்கப்பட்ட பெருமை உண்டு.
இந்த கோவிலில் விவசாயம் மற்றும் விவசாய நிலங்கள் செழிக்கவும் மாதந்தோறும் வருண கலச வழிபாடு நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு சமூக சேவைகளிலும் தோரணமலை நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் பெண்கள் முன்னேற்றம் காணவும், மாணவர்கள் கல்வியில் செழிக்கவும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர தொடர் வழிபாடு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை தீபாராதனை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
மேலும் இந்த கோவில் பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் முன்னோர்களுக்கு 1930 ஆம் ஆண்டு வெள்ளையர்களால் வழங்கப்பட்ட மணி மூலம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மணி அடிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் கடையம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu