தென்காசி அருகே கொலை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரபாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி சண்முகத்தாய், நிதி நிறுவனத்தின் கீழ் செயல்படும் குழுவில் கடன் பெற்றுள்ளார். இவரது பாக்கி தொகையை கேட்க ஆலடியூர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அடிக்கடி சண்முகநாதனின் வீட்டிற்கு வந்து பணம் கேட்க வந்த ராமசுப்பிரமணியனை, ஆத்திரத்தில் சண்முகநாதன் 02.11.2021 அன்று மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அச்சன்புதூர் வட்ட காவல் ஆய்வாளர் வேல்கனி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தியதன் பேரில், சண்முகநாதனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu