சுரண்டை அருகே தாய், மகள் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

சுரண்டை அருகே தாய், மகள் தற்கொலை  வழக்கில் திடீர் திருப்பம்
X
சுரண்டை அருகே தாயும் மகளும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக மகளின் காதலனை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை அருகே உள்ள கருவந்தாவை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தெய்வகனி (45). இவர்களது மகள் கலையரசி( 23). கலையரசி பிஎஸ்சி படிப்பு படித்து முடித்துவிட்டு, சுரண்டையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார். படித்த காலம் முதல் சுரண்டையில் உள்ள அவரது தாய்வழி உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு கலையரசியின் தாயார் தெய்வகனியும் முழு ஆதரவு தெரிவித்து இருந்தாராம்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதியன்று, தாயும், மகளும் வீட்டில் இரு அறைகளில் உள்ள மின்விசிறிகளில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஊத்துமலை போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கலையரசி சுரண்டை வரகுணரமபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் பாஸ்கர் என்பவரை காதலித்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் தெரியவந்தது. எனினும், தொடர்ந்து, பாஸ்கர் கலையரசிக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் மனமுடைந்த கலையரசி தன் தாயுடன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து விசாரணை செய்த போலீசார் தாயையும் மகளையும் தற்கொலைக்கு தூண்டியதாக பாஸ்கரை கைது செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!