பழைய குற்றால அருவியை ஊராட்சியிடமே ஒப்படைக்க வேண்டும்..!

பழைய குற்றால அருவியை ஊராட்சியிடமே ஒப்படைக்க வேண்டும்..!
X

சுற்றுலாத்துறை அமைச்சரிடம் மனு வழங்கிய போது எடுத்த படம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் பிரசித்தி பெற்றது. இதில் பழைய குற்றால அருவி மட்டும் வனத்துறை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை சந்தித்து முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் மனு அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

பழைய குற்றாலம் அருவி ஆயிரப்பேரி பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது

தற்போது வனத்துறை அதிகாரிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் அந்த அருவியை கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள்.அதன் தொடர்ச்சியாக அருவியில் இரவு 7 மணிக்கு மேல் குளிக்கக் கூடாது என்று சொல்லி சுற்றுலா பயணிகளை தடுத்து வருகிறார்கள்.

மேற்படி பழைய குற்றால அருவி சுற்றுலாத்துறைக்கு நல்ல வருமானத்தை தரக்கூடிய பகுதியாக விளங்கி வருகிறது.மேலும் காலங்காலமாக ஆயிரம்பேறி ஊராட்சி கட்டுப்பாட்டில் இருந்து வந்த பழைய குற்றாலம் அருவி இருக்கிற பகுதி ஊராட்சிக்கு உட்பட்டது. எனவே வரி வசூல் மற்றும் அருவி கட்டுப்பாடுகள் அனைத்தும் ஊராட்சிக்கு சொந்தமானது என்று வனத்துறை இதில் தலையிடக்கூடாது என்றும் ஊராட்சியில் தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஊராட்சி தீர்மானம் மற்றும் பழைய குற்றாலம் ஆயிரப்பேரி ஊராட்சியில் இருந்ததற்கான ஆதாரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.ஆகையால் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடர்ந்து ஊராட்சி கட்டுப்பாட்டில் அருவி இயங்குகிற வகையிலும் இரவு 7 மணிக்கு மேல் அருவியில் குளிப்பதற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தி உத்தர வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்டது

நிகழ்வின் போது மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் காசி தர்மதுரை மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் ஆலங்குளம் ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜாமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story