தென்காசி மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்ட உதவி மைய எண்கள் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் கோப்பு படம்.
தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி மகளிர் காண உரிமை தொகை திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தின் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் பலருக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என்று மகளிர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் மகளிருக்கு உரிமை தொகை கிடைக்க ஆலோசனை வழங்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது குடும்ப அட்டை எண் விபரத்துடன் மேற்கண்ட உதவி மையங்களில் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அலுவலக வேலை நாட்களில் காலை 10. 00 மணி முதல் மாலை 5. 45 மணி வரை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
உதவி மையங்களில் தொலைபேசி எண்கள்:
1. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், தென்காசி 9786172812,
2. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தென்காசி 9543615080,
3. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சங்கரன்கோவில் 9787009796.
4. வட்டாட்சியர் அலுவலகம், தென்காசி 6381020050.
5. வட்டாட்சியர் அலுவலகம், செங்கோட்டை 7010259439.
6. வட்டாட்சியர் அலுவலகம், கடையநல்லூர் 8072626674.
7. வட்டாட்சியர் அலுவலகம், சங்கரன்கோவில் 9043352270.
8. வட்டாட்சியர் அலுவலகம், வீ. கே புதூர் 9003809018.
9. வட்டாட்சியர் அலுவலகம், திருவேங்கடம் 6382037991.
10. வட்டாட்சியர் அலுவலகம், சிவகிரி 9042571129.
11. வட்டாட்சியர் அலுவலகம், ஆலங்குளம் 7904532534.
மேலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்க பெற்ற பயனாளிகளிடம் யாரேனும் தொடர்பு கொண்டு OTP விபரங்களை கேட்கும் பட்சத்தில் தெரிவிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu