தென்காசி காவல்துறைக்கு புதிய ரோந்து வாகனம்

தென்காசி காவல்துறைக்கு புதிய ரோந்து வாகனம்
X

தென்காசி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசால் புதிய நெடுஞ்சாலை ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரோந்து வாகனத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் IPS ஆய்வு மேற்கொண்டு வழங்கினார், பின்பு அவர் கூறுகையில் நெடுஞ்சாலை ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும், விபத்துக்களை தடுப்பதற்கும் புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனம் அரசால் வழங்கப்பட்டுள்ளது, இதனால் முன்பு இருந்ததை விட மேலும் ரோந்து பணியை தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அப்போது தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் தாமரை விஷ்ணு மற்றும் சார்பு ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story