தேசியவாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி : கலெக்டர் தலைையில் நடந்தது

தேசியவாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி : கலெக்டர் தலைையில் நடந்தது
X

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  நடந்த தேசிய வாக்காளர் தினம் உறுதி மொழி ஏற்பு நிகழச்சி.

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் கோபால் சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.01.2022) தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர ராஜ் தலைமையில், அனைத்துதுறைஅரசு அலுவலர்களும் ஏற்று கொண்டனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 18 வயது பூர்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கலெக்டர் கோபால் சுந்தர் ராஜ் தலைமையில் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs