முரசொலிமாறன் 82வது பிறந்தநாள்; திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

முரசொலிமாறன் 82வது பிறந்தநாள்; திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
X

முரசொலிமாறன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்யும் திமுகவினர்.

தென்காசியில் முரசொலி மாறன் 82வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 82வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் முரசொலி மாறனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story