தென்காசி அருகே குத்துக்கல்வலசை ஊராட்சி திட்டப்பணிகள்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

தென்காசி அருகே குத்துக்கல்வலசை ஊராட்சி திட்டப்பணிகள்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.
X

குத்துக்கல்வலசை ஊராட்சி திட்டப்பணிகளுக்கு பழனி நாடார் எம்எல்எ அடிக்கல் நாட்டினார் 

குத்துக்கல்வலசை ஊராட்சியில் 31 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பழனி நாடார் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அடிக்கல் நாட்டினர்.

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.13 லட்சம் செலவில் புதிய தார்சாலை அமைக்கும் இன்று துவங்கியது. இதற்கான பூமி பூஜை இன்று துவங்கியது. நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

இதே போல் அய்யாபுரம் ஊராட்சி துவக்க பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டி தர கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று இன்று அய்யாபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கு சட்டமன்ற தொகுதி நிதியில் ரூ.18 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அழகு சுந்தரம், குத்துக்கல்வலசை ஊராட்சி தலைவர் சத்யராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சந்தோஷ், நகரப் பொருளாளர் ஈஸ்வரன், சித்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story