பாவூர்சத்திரத்தில் மாயமான சிறுவனை டெல்லியில் கண்டுபிடித்த போலீசார்

பாவூர்சத்திரத்தில் மாயமான சிறுவனை டெல்லியில் கண்டுபிடித்த போலீசார்
X
பாவூர்சத்திரம் பகுதியில் காணாமல் போன சிறுவனை, தென்காசி காவல்துறையினர் டெல்லியில் கண்டுபிடித்தனர்.

கடந்த 11.03.2022 ஆம் தேதி பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரது மகன் புவனேஷ் (17 வயது) என்பவர் காணாமல் போனது தொடர்பாக தென்காசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வந்தனர். துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், உதவி காவல் கண்காணிப்பாளர் கிரீஸ் யாதவ் மற்றும் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் சிறுவனின் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தை பின் தொடர்ந்து கண்காணித்தனர்.

அதில், சிறுவன் இமாச்சலப் பிரதேசம் மணாலி சென்றிருப்பதை அறிந்து, தொடர் கண்காணிப்பில் சிறுவன் டெல்லியில் இருப்பதை உறுதி செய்தனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் பாலமுருகன் டெல்லி விரைந்து சென்று டெல்லி போலீசாரின் உதவியுடன் சிறுவனை கண்டுபிடித்து டெல்லியில் இருந்து சிறுவனை அழைத்து வந்து காவல் அதிகாரிகள், சிறுவனுக்கு அறிவுரைகள் வழங்கி அவரது பெற்றோருடன் சேர்த்து வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai future project