மதுரை-புனலூர் தொடர்வண்டி இன்று முதல் வழக்கம்போல் இயங்கும்: ரயில்வே நிர்வாகம்
பைல் படம்.
திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள இரணியல் அருகே இரட்டை ரயில் பாதை பணிக்காக சில பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடைபெறுவதாக இருந்தது. அதற்காக மதுரையிலிருந்து செப்டம்பர் 26 அன்று புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மற்றும் புனலூரில் இருந்து செப்டம்பர் 27 அன்று புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை விரைவு ரயில் (16730) ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த பாலம் அகலப்படுத்தும் பணி நடைபெறவில்லை. எனவே முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மதுரை - புனலூர் - மதுரை விரைவு ரயில்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu