தென்காசி அருகே அம்பலவாணர் திருக்கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்
தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரில் சிவகாமி அம்மன் சமேத அம்பலவாணர் திருக்கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் இன்று காலை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக இன்று மகா கணபதி பூஜை, புண்யாகவாசணம், சோம கும்ப பூஜை, சூரிய பூஜை, மண்டப பூஜை, வேதிகார்ச்சனை, வேத பாராயணம், மூல மந்திர ஹோமம், ஆறாம்கால யாகசாலை பூஜை போன்ற பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிவகாமி சமேத அம்பலவாணேஸ்வரர் கோவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் மூலவருக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் நடராஜன், ஆறுமுகம், வேலுப்பிள்ளை, சுப்பிரமணியன், சாஸ்தா, கண்ணன், வீராச்சாமி, கலைச்செல்வன், சாமி வேளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் பொன்னம்மாள், சங்கரசுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி, கசமுத்து, தென்காசி தீயணைப்பு சிறப்பு அலுவலர் கணேசன், பாஜக நகர செயலாளர் முத்துகிருஷ்ணன், வெளிநாடு தமிழ் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன், பாஜக விவசாய மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி பாஜக பிரமுகர் ராஜ்குமார் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu