தென்காசி அருகே அணைக்கரைஅய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா
தென்காசியை அடுத்துள்ள வேட்டைக்காரன்குளம் ஊரில் அமைந்துள்ள அணைக்கரை அய்யனார் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தென்காசியை அடுத்துள்ள வேட்டைக்காரன்குளம் ஊரில் அமைந்துள்ள சொக்கநாதன்புத்துார், கிருஷ்ணாபுரம், நாங்குநேரி யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பூர்ண, புஷ்கலா உடனுறை அணைக்கரைஅய்யனார் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நிகழ்ச்சியின் துவக்கமாக 26.08.2021 அன்று மாலை மஹாகணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகங்கள் துவங்கியது. அதனை தொடா்ந்து பூர்ண, புஷ்கலா உடனுறை அணைக்கரைஅய்யனார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வேதவிற்பனா்கள் குழு மூலம் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு 27.08.2021 அன்று காலை 7 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் கோபுர கலத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னா் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த கோவிலின் உபகோவிலான தென்காசி அரசு கால்நடை மருத்துவமனையின் எதிர்புறம் உள்ள ஸ்ரீமஞ்சனசெல்வசுடலைமாடன் கோவிலில் சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு யாகங்கள் சிறப்பு பூஜை, அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டடு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு விழாக்கமிட்டியா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் சொக்கநாதன்புத்துார், கிருஷ்ணாபுரம், நாங்குநேரி, மற்றும் கோவில் வரிதாரா்கள் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu