காமராஜர் பிறந்த நாள் விழா : தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை..!

காமராஜர் பிறந்த நாள் விழா : தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை..!
X

 மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் காமராஜருக்கு மரியாதை செலுத்திய போது எடுத்த படம்

தென்காசியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

காமராஜர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் தமிழக முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான காமராஜர் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசியில் மாவட்ட மகிளா காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

காந்தி சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவியும், நகர்மன்ற உறுப்பினருமான பூமாதேவி,மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன்,நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகரப் பொருளாளர் ஈஸ்வரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் ரபிக், சுப்பிரமணியன்ஆகியோர் கலந்து கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து நகர காங்கிரஸ் கட்சி சார்பில் 23வது வார்டு பகுதியில் கட்சிக் கொடியேற்றப்பட்டு சுமார் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகரத் துணைத் தலைவர் கதிர்வேல், 23 வது வார்டு தலைவர் ஆறுமுகம்,துணைத் தலைவர் டேவிட் ராஜ், நகர பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி,25-வது வார்டு தலைவர் பிரேம்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story