குற்றால அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றால அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X

 குற்றாலம் பிரதான அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போன சூழலில் குற்றால சீசன் களையிழந்து காணப்பட்டது

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருவிகள் வறண்டு காணப்பட்ட நிலையில் நேற்று பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டனர்

தென் மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்கக்கூடிய குற்றால அருவிகள் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவ கால மாதங்கள் ஆகும் . இந்தப் பருவ காலத்தில் குற்றாலம் பிரதான அருவி , ஐந்தருவி , சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இந்தப் பருவநிலையை அனுபவிக்க பிற மாவட்டங்கள் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் . இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போன சூழலில் குற்றால சீசன் களையிழந்து காணப்பட்டது.

சீசன் காலகட்டங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக குற்றால அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
மட்டன் சாப்டும்போது இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்டாதீங்க.. உயிருக்கே ஆபத்தாகலாம்..!