தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழா
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏத்தி திறந்து வைத்த போது எடுத்த படம்.
தென்காசி மாவட்டம் உதயமாகி ரூபாய் 11கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மாவட்ட காவல் அலுவலகம் திறப்பு. அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி புதிய மாவட்டமாக உதயமாகி நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் மாவட்டத்திற்கான புதிய அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ரூபாய் 11கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து புதிய மாவட்ட காவல் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தென்காசி நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே சி ஆர் ராமச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்ற நிலையில் திமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் அலுவலகத்தில் உள்ளே நுழைவதற்கு முண்டியடித்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu