கிராமப்புறங்களில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் காவல்துறையினர்

குற்றாலம் அருகே கொட்டாகுளம் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அனைத்து ஊர்களிலும் பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டாகுளம் கிராமத்தில் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினர்.
பின்னர் நம் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவ துவங்கியுள்ளதால் அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அனைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும்,
கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu