தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை: 35 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை: 35 பேர் கைது
X
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 35 நபர்கள் கைது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 35 நபர்கள் கைது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று(30.09.2021) காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த 35 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 285 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Tags

Next Story
ai solutions for small business