தென்காசி மாவட்டத்தின் புதிய மக்கள் தொடர்பு அலுவலர் பாெறுப்பேற்பு

தென்காசி மாவட்டத்தின் புதிய மக்கள் தொடர்பு அலுவலர் பாெறுப்பேற்பு
X

தென்காசி மாவட்ட புதிய பிஆர்ஓ.,வாக பொறுப்பேற்ற இளவரசி.

தென்காசி மாவட்டத்தின் புதிய மக்கள் தொடர்பு அலுவலராக இளவரசி இன்று பாெறுப்பேற்றுக் கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களாக சிறப்பாக பணியாற்றி வந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் செய்தி மக்கள் தொடர்பாளர் கருப்பண்ண ராஜவேல் காரைக்குடி பகுதியில் போக்குவரத்து துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இன்று அவருக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்கள் சார்பில் பிரியாவிடை கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் கருப்பண்ண ராஜவேலுக்கு சால்வை அணிவித்தார்.

இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பாளராக இளவரசி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது