தாமரை இல்லை என்றால் நாடே இல்லை: தென்காசி பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன்

தாமரை இல்லை என்றால் நாடே இல்லை: தென்காசி பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன்
X

பட விளக்கம்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் தென்காசி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்த போது எடுத்த படம்.

தாமரை இல்லை என்றால் நாடே இல்லை என தென்காசி பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தென்காசி தான் ஓடி ஆடி விளையாடிய பகுதி என்பதாலும், தாமரை தனக்கு பிடிக்கும், தாமரைக் இல்லாமல் நாடே இல்லை என்பதாலும் தான் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக பாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளரான ஜான்பாண்டியன் பேட்டியளித்தார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உள்ளது.

இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சி சார்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தென்காசி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன் கூறுகையில், தாமரை எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த வகையில் மக்கள் அனைவரும் தாமரையே, தாமரை இல்லாமல் நாடே இல்லை என்ற அடிப்படையில் தான் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறிய அவர், தென்காசி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுகவிற்கும், பாஜக விற்கும் தான் போட்டி என தெரிவித்தார்.

தென்காசி விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ளது, எனவே விவசாயம் சார்ந்த தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். அந்த வகையில் எலுமிச்சைக்கு குளிர் பதனக் கிடங்குகள் அதிக அளவில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், மக்களை சந்தித்து மோடியின் திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.

தென்காசியில் போட்டியிட காரணம் என்னவென்றால், தென்காசி எனது சொந்த தொகுதி எனவும், தான் சிறுவயது முதல் ஓடி ஆடி விளையாடிய இடம் எனது சொந்தங்கள், நண்பர்கள் என அனைவரும் நிறைந்த பகுதி என்பதால் இங்கு போட்டியிடுவதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், திமுகவைச் சேர்ந்த தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை, மேலும் இதற்கு முன்பு போட்டியிட்டவர்களும் தற்போது துவண்டு போய் உள்ளனர். அந்த வகையில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!