தமிழ் புத்தாண்டில் திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் வெளியிடுவேன்: அண்ணாமலை

தமிழ் புத்தாண்டில் திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் வெளியிடுவேன்: அண்ணாமலை

தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று 27 திமுக முக்கிய புள்ளிகளின் ரூ.2.24 லட்சம் கோடி மதிப்பு சொத்து பட்டியல் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று மாலை தென்காசி பகுதியில் உள்ள வாய்க்காலம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற சூழலில், இந்த கூட்டத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கொட்டுகின்ற மலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது :-

கொட்டுகின்ற மழையை பொருட்படுத்தாமல் இங்கு கூடியிருக்கின்ற கூட்டத்தை பார்த்தால் தமிழகத்தில் மாற்றம் நடக்கும் என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளது எனவும், பாஜக தொண்டர்கள் நடத்திக் காட்ட முடியாத ஒன்றை கண்டிப்பாக நடத்திக் காட்டுவார்கள் எனவும், தென்காசியில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பொதுக்கூட்டமானது நடைபெற்று வருவதாக அவர் பேசினார்.

தொடர்ந்து, திமுக அரசின் செயல்பாடுகளை 3 பாணியில் வர்ணித்து குற்றம் சாட்டிய அவர், சரித்திரத்தை மாற்றி சமூக நீதியை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என கூறி 1967 லிருந்து ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும், ஆயிரம் பொய்யை சொல்லி கல்யாணம் செய்வார்கள் என்பது போல லட்சம் பொய்யை சொல்லி திமுகவினர் ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.

மாட்டின் கொம்பில் இருந்து பால் வடியும் என்று சொல்லுகின்ற கூட்டம் திமுகவினர் என திமுகவினரை கடுமையாக சாடினார்.

தொடர்ந்து, மாடல் பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கி அதற்கு நுழைவுத் தேர்வு நடத்தும் தமிழக அரசு ஏன், நீட் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்கின்றது. மாடல் பள்ளிகள் தமிழகத்தில் வேண்டும் என்றால் நீர் நுழைவுத் தேர்வு எங்களுக்கு வேண்டும் என பேசினார்.

தமிழகத்தில் ஏய்ம்ஸ் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 150 மாணவர்கள் அதில் சேர்க்கப்பட்டு, இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து அந்த கல்லூரி மாணவர்கள் பயின்று வருவதாகவும், ஏய்ம்ஸ் கல்லூரிக்கான கட்டமைப்புகள் மட்டுமே இல்லை எனவும் பேசினார்.

எய்ம்ஸ் கல்லூரியை கட்ட வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள சூழலில், தமிழகத்தில் சாராயம் விற்று வந்த 46 கோடியில் ஒரு சிறிய தொகையான 2000 கோடியை தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுத்தாலே போதும் உடனே எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை கெட்டிவிடலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் உள்ள 27 முக்கிய நபர்களின் சொத்து மதிப்பு வருகின்ற தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், இந்த பட்டியலில் ரெட் செயின்ட் மூவிஸ் சொத்து மதிப்பும் உள்ளது எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக 27 நபர்களின் சொத்து மதிப்பு சுமார் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் பேசினார்.

Tags

Read MoreRead Less
Next Story