மனிதநேயமிக்க தென்காசி தாசில்தார்: பாராட்டும் சமூக ஆர்வலர்கள்

மனிதநேயமிக்க தென்காசி தாசில்தார்: பாராட்டும் சமூக ஆர்வலர்கள்
X

மூதாட்டிக்கு தனது சொந்த பணத்தை கொடுத்து சாப்பிட அனுப்பும் தாசில்தார்.

மூதாட்டியை மனிதநேயத்துடன் நடத்திய தென்காசி தாசில்தாருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தாசில்தாரிடம் தனக்கு முதியோர் தொகை வேண்டி கோரிக்கை வைத்தார். அப்போது தாசில்தார், நீங்கள் சாப்பிட்டீர்களா என்று கேட்டார்.

அதற்கு அந்த மூதாட்டி, நான் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகுது என்றார். உடனே தாசில்தார் அவரது சொந்த பணத்தை கொடுத்து நீங்கள் சாப்பிட்டுட்டு உடனே பக்கத்தில் இருக்கும் இ-சேவை மையத்தில் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பியுங்கள் என தெரிவித்தார்.

மேலும் அந்த மூதாட்டி கட்டியிருந்த சேலை கிழிந்திருந்ததால் உடனே அவருக்கு இரண்டு சேலைகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து இ-சேவை மையத்திலுள்ள பெண்கள், சேலையை அவருக்கு கட்டி விட்டனர்.

இந்த மனித நேயமிக்க செயலை பாராட்டி அதிகாரிக்கு சமூக ஆர்வலர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!