தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
X

இடுப்பு எலும்பு மூட்டு மாற்றி அறுவை சிகிச்சை நடைபெற்ற போது எடுத்த படம்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் வெளி நோயாளிகளாக சுமார் 1490 நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மகப்பேறு பிரிவில் தினமும் சுமார் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வெளி நோயாளி பிரிவில் சிகிச்சையும், சராசரியாக 8 முதல் 10 பிரசவ அறுவை சிகிச்சைகளும் தென்காசி அரசு மருத்துவமனையில் நடக்கிறது.

கண் சிகிச்சை பிரிவில் தினமும் 7 முதல் 10 கண்புரை அறுவை சிகிச்சைகள் நடைபெற்று மாநிலத்திலேயே ஐந்தாவது அதிக அளவில் கண்புரை அறுவை சிகிச்சைகள் நடைபெறும் மருத்துவமனையாக தென்காசி அரசு மருத்துவமனை விளங்குகிறது.

பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு தென்காசி மாவட்டத்தில் தென்காசி மருத்துவமனையில் மட்டுமே 24 மணி நேரமும் சிறப்பாக குழந்தைகள் பிரிவு செயல்பட்டு வருகிறது.

மேலும் காது மூக்கு தொண்டை பிரிவு , பல் பிரிவு, நுண்ணுயிரியல் பிரிவு , 24 மணி நேர ஆய்வகம், 24 மணி நேர நுண் கதிர் பிரிவு ,சிடி ஸ்கேன் என சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் கூறும் போது, தென்காசி மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிக சிகிச்சைகளும் அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகிறது.

கழுநீர்குளத்தைச் சேர்ந்த 40 வயது மகரஜோதி என்பவருக்கு வலது இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.

பெரும்பாலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும் இந்த பெரிய அறுவை சிகிச்சைகள், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவர் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் தலைமையில் எலும்பு முறிவு மருத்துவர்கள் மது, முத்துராமன், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் மில்லர் ஆகியோரால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

சுமார் இரண்டு லட்சத்திற்கு மேல் செலவாக கூடிய இந்த அறுவை சிகிச்சை தென்காசி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இதே நபருக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இடது இடுப்பு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை ஏற்கனவே தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இன்று பொது அறுவை சிகிச்சை பிரிவில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மூன்று உயிர்க்காக்கும் பொது அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளது. என்று கூறினார்

பொது அறுவை சிகிச்சை நிபுணர் குழு மருத்துவர் சொர்ணலதா தலைமையில் மருத்துவர்கள் விஜயகுமார், முத்துக்குமாரசாமி, பழனி மயக்கவியல் நிபுணர் மருத்துவர் ராஜேஸ்வரி குழு இந்த மூன்று அறுவை சிகிச்சைகளையும் செய்தனர். தென்காசி மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சைக்கு ஒத்துழைப்பு நல்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டார்.

மேலும் நோயாளிகளின் நலன் கருதியும் பாதுகாப்பு கருதியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு காத்திருப்பு அறை தயார் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இரண்டு இடங்களில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரும் சுடு தண்ணீரும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மருத்துவமனையின் பிரதான வாயிலில் செக்யூரிட்டி அலுவலகம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா அவர்கள் கூறும் போது தென்காசி மருத்துவமனையில் அதிக நோயாளிகள் சிகிச்சை பெற்று பயன்பட்டு வருகிறார்கள்.

நோயாளிகளின் விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்கள், பணியாளர்கள் செவிலியர்கள் இல்லாமல் குறைவான விடயத்திலேயே பணியாளர்கள் காணப்படுகிறார்கள். இருப்பினும் மருத்துவமனை கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் கூட்டு முயற்சியில் சிறப்பான சிகிச்சை செய்து வருகிறார்கள் என்று கூறினார்

தென்காசி மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்களுக்கு இணை இயக்குனர் நலப் பணிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Updated On: 27 March 2023 4:22 AM GMT

Related News