தென்காசி காவல்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

தென்காசி காவல்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
X

காவல்துறையை கண்டித்து தென்காசியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி காவல்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தென்காசியில், வழக்கில் சம்பந்தமில்லாத இளைஞரை தாக்கி காயப்படுத்தியதாகக் குற்றாம்சாட்டி, காவல்துறையை கண்டித்து, இந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் குற்றாலநாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதைத்தொடர்ந்து காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வெங்கடேஷ பெருமாள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன், விஸ்வ ஹிந்து பரிஷத் தளவாய், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!