தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் குறை தீர்க்கும் முகாம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை மக்கள் குழு தீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள், அடிப்படை வசதிகளான பொது சுகாதாரம், குடிநீர், வறுகால் வசதி, போன்றவற்றிற்கு மனு அளித்தனர்.மேலும் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் நல திட்ட உதவிகள், ஆதி திராவிட நலத்துறை சார்பில் கிடைக்கும் நலத்திட்ட உதவிகள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் போன்றவற்றிற்கும் மனு வழங்கி வருகின்றனர். நிலப்பிரச்னை, தனி நபர் பிரச்னை, சமூகப் பிரச்னை போன்ற பிரச்னைகளுக்கும் மனு அளிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ-13,500/- மதிப்புள்ள மொத்தம் ரூ-81,000/- மதிப்பில் 06 மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளையும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு குச்சிகள் கண்ணாடிகள் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் தலா ரூ.1000 மதிப்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் காதொலி கருவி வேண்டி மனு அளித்த ஆறுமுகசாமி என்ற காது கேட்காத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 8,500/ மதிப்பிலான காதொலி கருவியினையும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வழங்கினார்.இந்தக் கூட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu