தென்காசி நகராட்சி பணியாளர் வீட்டில் திருட்டு பொதுமக்கள் அச்சம்..!
கோப்பு படம்
*தென்காசி நகராட்சி பணியாளர் வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளை. அடுத்தடுத்த வீடுகளில் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாதவராஜ். இவர் தற்போது தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியில் வசித்து வரும் நிலையில், இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது சொந்த ஊரான கடையநல்லூருக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாதவராஜ் உடனே உள்ளே சென்று பார்த்தபோது, அவரது வீட்டில் இருந்த சுமார் 35 சவரன் மதிக்கத்தக்க தங்க நகைகள் கொள்ளை போயிருந்துள்ளன.
அதைப் பார்த்து அதிர்ச்சடைந்த மாதவராஜ் உடனே சம்பவம் குறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்திய போது, அதே போன்று அதே பகுதியில் இரண்டு வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளதும் தெரியவந்தது.
மேலும், அந்த வீடுகளில் சுமார் ரூ.2,000 பணம் இருந்தும் அதனை எடுக்காமல் அப்படியே விட்டு சென்றதும், மாதவராஜ் வீட்டில் மட்டும் 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu