குற்றாலத்தில் நடந்த சாரல் விழாவில் கோலப் போட்டி

குற்றாலத்தில் நடந்த சாரல் விழாவில் கோலப் போட்டி
X

குற்றாலம் சாரல் விழாவில்  கோலப்போட்டி நடைபெற்றது.

குற்றாலம் சாரல் விழாவில் கோலப் போட்டி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நடைபெற்று வருகிறது. அதில் இன்று கோல போட்டிகள் நடைபெற்றது. இதில் 46 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கு நடுவராக வேளாண் இனை இயக்குநர் தமிழ் மலர், குற்றாலம் பேராசிரியைகள் மகேஸ்வரி, சுதனா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் சாம்பவர் வடகரையை சார்ந்த வடிவுகரசி முதல் பரிசும், காசிமேஜர்புரத்தை சேர்ந்த ஜோதி சித்ரா இரண்டாவது பரிசும், இடைகாலை சேர்ந்த மெர்ஸி, சுரண்டையை சேர்ந்த இந்திரா ஆகிய இருவரும் மூன்றாவது பரிசையும் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து இந்திய மருத்தும் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான யோகா போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் மாணவி இந்து முதலிடம் பெற்றார். மாணவி தீபிகா இரண்டாம் இடம், விஜயலட்சுமி மூன்றாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம், ஆரோக்கிய வாழ்விற்கு சித்த யோகாசனம், யோகாசன நடனம் மற்றும் சித்தா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவர் அலுவலர் உஷா. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் சார்ந்த மரியா, துணை முதல்வர் சௌந்தர்ராஜன், மருத்துவர் ராஜேஷ் விரிவுரையாளர் தாவரவியல் துறை, மருத்துவர் சுதா விரிவுரையாளர் தாவரவியல் துறை, மருத்துவர் ஸ்ரீராம் விரிவுரையாளர் குழந்தை மருத்துவம் துறை, அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டை, மருத்துவர் கலா மருத்துவர் ஹரிஹரன் மற்றும் தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவர்கள் , மருந்தாளுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள், யோகா தெரபிஸ்ட் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story