சுரண்டையில் தீயணைப்பு துறையினர் வெள்ளப் பேரிடர் மீட்பு ஒத்திகை

சுரண்டையில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது எப்படி என தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.

சுரண்டை அருந்தவபிராட்டி குளத்தில் மழை வெள்ள நேரங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது எப்படி என வீகேபுதூர் தாசில்தார் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி வெள்ளம் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது எப்படி என்ற பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி சுரண்டை வீ.கே.புதூர் ரோட்டிலுள்ள அருந்தவபிராட்டி குளத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வீரகேரளம்புதூர் தாசில்தார் பட்டு முத்து முன்னிலை வகித்தார். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வன், நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் சிறப்பு நிலை அலுவலர் ரவீந்திரன், மற்றும் வீரர்கள் மாடசாமி, சமுத்திரபாண்டி, விவேகானந்தன், ராஜேந்திரன், சாமி, பொன்ராஜ் ஆகியோர் வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை கொண்டு தப்பிப்பது எப்படி மற்றும் தீயணைப்பு துறையின் உதவியை பெறுவது அதன் பணிகள் குறித்து விளக்கினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!