/* */

நான்கு வழி சாலையை மாற்று பாதையில் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

கொல்லம் - திருமங்கலம் நான்கு வழி சாலையை மாற்று பாதையில் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்

HIGHLIGHTS

நான்கு வழி சாலையை மாற்று பாதையில் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்று வழியில் அமைக்கக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த போது எடுத்த படம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய நான்கு வழிச்சாலை திட்டத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நோட்டாவுக்கு வாக்களிப்போம்- விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று ராஜபாளையம் முதல் செங்கோட்டை இடையே NH744 என்கின்ற நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த நான்கு வழிச்சாலையை மாற்று வழி பாதைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்க விவசாயிகள் கூறும்போது, தற்போது ராஜபாளையம்- செங்கோட்டை இடையே அமைய உள்ள நான்கு வழி சாலை திட்டத்தால் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டால் தாங்கள் எந்த அரசியல் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்போம் எனவும், இல்லை என்றால் தேசிய கட்சியான பாஜகவிற்கு வாக்களிப்போம் எனவும் தெரிவித்தனர்.

Updated On: 4 March 2024 1:41 PM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 2. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 3. இந்தியா
  சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
 4. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 5. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 7. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
 8. இந்தியா
  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
 9. லைஃப்ஸ்டைல்
  தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
 10. லைஃப்ஸ்டைல்
  உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...