தென்காசியில் வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மனு

தென்காசியில் வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மனு
X

தென்காசியில் வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

வெள்ள நிவாரணம் வழங்க கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசியில் இன்று மக்கள் குறைதீர்க்கும் மனுநீதி நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் வெள்ளாளங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ள நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு திட்டம் நிவாரணம் ஆகியவற்றை வழங்கக்கோரி பாதிப்படைந்த மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிர்களோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 2018 - 2019, 2020 - 2021 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்காக கட்டிய இன்சூரன்ஸ் தொகை இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் தற்போது பெய்த மழையினால் அனைத்து பகுதி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

அதேபோல் செங்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு அளித்திருந்தனர். தென்காசி சத்யா நகர் பகுதியில் தார் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!