தென்காசியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்!

தென்காசியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்!
X

பட விளக்கம்: விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

தென்காசியில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதில்லை எனவும் மாறாக விவசாயிகள் என்ற போர்வையில் மற்றவர்கள் அதிக அளவு கடன் பெற்றுக் கொண்டது குறித்து முறையான ஆய்வு நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் விவசாய பெருமக்கள் பங்கேற்றனர். மேலும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுக்களாக முன் வைத்தனர்.

இதில் அதிகாரிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுக்கு உரிய பதில்கள் திரும்ப தருவதில்லை எனவும் கூட்டத்தில் மாவட்டத்தில் மழை அளவு அதிகமாக பெய்தது என்றது என்று குறிப்பிட்ட நிலையில் மலைப்பொழிவு இல்லாத நிலையில் தவறாக குறிப்பிட வேண்டாம் என குற்றம் சாட்டினர்.

மேலும் மாவட்டத்தின் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு முறையாக வங்கி கடன் கிடைப்பது இல்லை. அதற்கு மாறாக விவசாயிகள் அல்லாதவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் இந்த கடன் தொகைகளை பெற்றுக் கொண்டு வட்டிக்கு கொடுக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

எனவே அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கடன் பெற்றவர்கள் குறித்து முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இடம் கோரிக்கையை முன் முன்வைத்தனர். மேலும் விவசாயிகள் என்ற போர்வையில் மற்றவர்கள் இம்மாதிரியான முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்