தென்காசியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க திரண்ட விவசாயிகள்

தென்காசியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க திரண்ட விவசாயிகள்
X

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்த விவசாயிகள்.

தென்காசியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க திரண்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தென்காசி மாவட்டத்தில் தற்போது உள்ள திருமங்கலம் - கொல்லம் சாலைக்கு பதிலாக நான்குவழிச் சாலை அமைக்க கடந்த 2018 நவம்பரில் நெடுஞ்சாலைத் துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தபாதையானது தென்காசி மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லுர் மேற்கு, புளியங்குடி கிழக்கு, வடகரை வழியாக புளியரை செல்கிறது.

புத்தூரில் இருந்து புளியரை வரை முழுமையாக விவசாய நிலமாக இருப்பதால் விவசாயிகள் எதிர்ப்பல் சாலை நில அளவைப் பணி அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2018 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பு 2019 நவம்பர் மாதம் காலாவதியானது. புதிதாக அமைய உள்ள சாலை விளைநிலங்கள் வழியாகவும், தற்போது ளள்ள சாலையை விட அதிக தூரம் இருப்பதாலும், வன உயிரினங்கள் நடமாடும் பகுதி வழியாக செல்வதாலும் மாவட்ட தலைநகரான தென்காசி, சுற்றுலா தலமான குற்றாலத்தை இணைக்காமல் செல்வதாலும் மாற்றுப் பாதையில் அmமைக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியதுடன் அரசுக்கு கோரிக்கையும் வைத்தனர்.

சாலையை மாற்றி அமைக்கும்பட்சத்தில் இந்த குறைகள் இல்லாமல் சாலையை 10 கிலோமீட்டர் குறைவான பயண தூரத்தில் மற்றும் விவசாய நிலங்களில் பெரிதும் பாதிப்பை குறைத்து, வன விலங்குகளுக்கு பாதிப்பின்றி, தென்காசி, குற்றாலத்தை இணைத்து சாலை அமைக்க முடியும். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, தனுஷ் எம்.குமார் எம்பி ஆகியோரிடம் கடந்த ஆட்சிக்காலத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்டு இத்திட்டத்தை மாற்றி அமைப்பதாக உறுதியளித்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்

இந்நிலையில், 2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த திட்டத்தை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் மாற்று சாலை கோரிக்கைகளை பரிந்துரை செய்யாமல், தற்போது அமைந்துள்ள அரசிடம் அனுமதி பெறாமல் பழைய திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தை கைவிட்டு, மாற்று சாலை அமைக்க பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் சுமார் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திறண்டனர்.

விவசாயிகள் போராட்டத்தை முன் கூட்டியே அறிந்த காவல் துறையினர், விவசாயிகளை பேரூந்து நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்துத்து மனு அளிக்க வேண்டும் என கோரிக்கையுடன் உள்ள விவசாயிகளிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு