கடையத்தில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி..!
கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்
கண் மருத்துவமனை தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய அளவில், கண் மருத்துவமனைகளும், அதனை சார்ந்த கண் வங்கிகளும் கண் தான விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடித்து வருகிறது இதன் வழியில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி கடையத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கி கடையம் பேருந்து நிலையம் வழியாக, சார்பதிவாளர் அலுவலகம் வழியாக சத்திரம் பாரதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இனிதே பேரணி நிறைவு பெற்றது, இந்த பேரணியில் மாணவ மாணவியர்கள் மற்றும் 650 பேருக்கு மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்துகொண்டு மாபெரும் கண்தான விழிப்புணர்வு பேரணியாக நடைபெற்றது.
பேரணியில் தலைமை விருந்தினராக கடையம் காவல் ஆய்வாளர் மேரி ஜமிதா, சிறப்பு விருந்தினர்களாக கடையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் VSM செல்லம்மாள் முருகேசன், கடையம் ஆணையாளர் திருமலை முருகன் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்கள்.
திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் பிரேம்குமார் ஜோசப் கண் தானம் செய்வதின் அவசியத்தை குறித்தும் உலக அளவில் கருவிழி பார்வை இழப்பு தடுப்பதை குறித்தும் விரிவாக எடுத்துரைதார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu